
காதலின் பாதையில் போனதில்லை என் நெஞ்சம்,
கண்டேன் நான் உன்னை, பின்புதான் உயிரினுல் ஏதோ நடுக்கம்,
ஏனோ ஏனோ என் கனவில் வந்து,
என்தன் நிஜத்தை கலைத்து சென்றாய்.
பாலைவனம் போல் வறண்டிருந்த நிலையிலடி என் நெஞ்சம்,
பசுமை தரும் நதி போல் என்தன் நெஞ்சில் உன் தஞ்சம்,
காதல் கடலில் நானும் இன்று விழுந்ததென்ன,
உன்தன் அழகின் வெள்ளம் என்னை இங்கு கொல்வதென்ன,
உனை நினைத்து உறக்கம் இல்லை,
கனவினிலும் உன்தன் தொல்லை,
உயிர் கொண்டு, மனம் வென்று,
உடல் மட்டும் விட்டுச் செல்லும்.....(காதலின்)
No comments:
Post a Comment